Tag Archives: inandoutCinema

‘அருந்ததி’ – ஹிந்தி ரீமேக் நாயகி யார் ?

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்து 2009ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘அருந்ததி’. ஜமீன் காலத்து பேய் கதையாக வெளிவந்த இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது. பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா அல்லது கரீனா கபூர் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் யாருடைய கால்ஷீட் […]

கோமாளி பட இயக்குநர்க்குபரிசளித்த தயாரிப்பாளர் !!

டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய […]

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின்  “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில்  டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் […]

அமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா

சிரஞ்சீவி நடித்துள்ள பிரம்மாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்னர் டிரைலர் ஐந்து மொழிகளிலும் வெளியானது. சிரஞ்சீவியின் ரசிகரான பாலிவுட் நடிகர் அமீர்கான், சைரா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இப்போதே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியிருப்பதாகவும், […]

நடிகை பானுப்பிரியா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை ஓராண்டு காலம் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாகவும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் மாதம் அஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார்  காவல் நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா […]

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவர் தான்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதனையடுத்து சேரன், […]

கரீனாவின் உடை 1 லட்சம் ரூபாய்!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு, 39 வயதாகிறது. திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்து விட்டது. ஆனாலும், நடிப்பின் மீது, அவருக்குள்ள தாகம் குறைவது போல் தெரியவில்லை. தொடர்ந்து, முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இளம் நடிகையர் பலர், பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ளதால், அவர்களின் கவர்ச்சி புயலில், தான், காணாமல் போய் விடக் கூடாது என்பதிலும், கவனம் செலுத்துகிறார். தற்போதைய பேஷனுக்கு ஏற்றபடி, உடைகளை அணிவதில், ரொம்பவே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர், ஒரு, ‘டிவி […]

சாஹோ பார்க்காத ஸ்ரத்தா கபூர்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வெளியான படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் சாஹோ படத்தை இதுவரை பார்க்கவில்லை என ஸ்ரத்தா கபூர் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில் படப்பிடிப்பு, டப்பிங்கின் போது மட்டும் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்த்தேன். தியேட்டருக்கு சென்று இன்னும் முழு படத்தையும் பார்க்கவில்லை என்கிறார். மேலும், சாஹோ படத்தை சிலர் […]
Page 1 of 10212345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news