Tag Archives: icc

முதல் 5 இடங்களில் இரண்டு இந்தியர்கள்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது டெஸ்ட்டில் கோலி டக்அவுட் ஆனதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 903 புள்ளிகளுடன் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் 904 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 878 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். […]

ஐசிசி அறிவித்துள்ள புதிய விதி… தப்பித்த கேப்டன்கள்…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிகளில் ஐசிசி அமைப்பு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ஒரு போட்டியில், ஒரு அணி தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தால், அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது ஐசிசி இந்த விதியை மாற்றியுள்ளது. தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இனி […]

தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை […]

நியூசிலாந்து – இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை!!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளன. முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்த இவ்விரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இவ்விரு அணிகளும் 9 முறை சந்தித்து உள்ளன. அதில் 4 போட்டிகளில் இங்கிலாந்தும், 5 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 2007 ஆம் ஆண்டின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை […]

மழையால் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு….

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 46.1வது ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தும், மழை விடாததால் ஆட்டத்தை இன்று தொடருவது என முடிவெடுக்கப்பட்டது.

IND vs NZ: இறுதிப் போட்டியில் நுழையப் போவது யார்?

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் அரை இறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்தும் மோதுகின்றன. இந்தப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக்கோப்பைத் தொடரில் நியுசிலாந்து அரை இறுதிக்குள் நுழைவது இது எட்டாவது முறையாகும். இதில் கடந்த முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்று கோப்பையை தவற விட்டது. […]

ரோகித் சர்மா அடித்த பந்து ரசிகையை தாக்கியது..!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இந்தியா – வங்தேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, ரோகித் சர்மா அடித்த பந்து, ஆடுகளத்தை தாண்டி, அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகை மீது விழுந்தது. இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்கு பின்னர் ரசிகையை சந்தித்த ரோகித் சர்மா, தனது கையெழுத்திட்ட தொப்பி ஒன்றையும் வழங்கினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை பிசிசிஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வங்கதேச அணியை வீழ்த்தி:அரையிறுதியில் இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா 104 ரன்களும், ராகுல் 77 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். ரிஷப் பந்த் 48 ரன்களும், தோனி 35 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு […]

ஜாதவுக்கு பதிலாக ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேதர் ஜாதவுக்கு அடுத்து வரும் ஆட்டங்களில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. இதற்கு தோனி மற்றும் கேதார் ஜாதவின் மோசமான பேட்டிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோனி – ஜாதவ் இணை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் […]

உலகக்கோப்பை தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்!?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விஜய் சங்கர் விலகியுள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படுவார் என […]
Page 1 of 712345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news