ஐசிசி டி20 தரவரிசை: : 4-வது இடத்துக்கு முன்னேறினார் கோலி

 ஐசிசி டி20 தரவரிசை: : 4-வது இடத்துக்கு முன்னேறினார் கோலி

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.ஐசிசி டி20 தரவரிசை புதன்கிழமை வெளியானது.

இங்கிலாந்துடனான கடைசி டி20 ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் முதன்முறையாக 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.சூர்யகுமார் யாதவ் 66-வது இடத்துக்கும் ரிஷப் பந்த் 69-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 21 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹார்திக் பாண்டியா 47 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ஷிகர் தவண் 98 ரன்கள் விளாசியதையடுத்து, இரு இடங்கள் நகர்ந்து 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் நகர்ந்து, டாப் 20 வரிசைக்குள் நுழைந்துள்ளார்.

 • 16 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !