Tag Archives: tamil cinema

பிரபல மாடல் அழகியை ஏமாற்றிவிட்டாரா இந்தியன் கிரிக்கெட் அணி தலைவர்!?

நடிகையும் மாடல் நடிகையுமான சோபியா ஹயாதை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா காதலித்து காயபடித்தினார் என்று நியூஸ் வைரலாகி வருகிறது. அதை பற்றி ஒரு அலசல்!.. லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சோபியா ஹயாத் பின்வருமாறு கூறினார், தனது வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன். என் வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை என்னால் மறக்கமுடியாது. ஏனென்றால் ரோகித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் முதல் முறையாக சந்தித்தேன். […]

தமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்?

கதையா, திரைக்கதையா, இயக்குனரா, தயாரிப்பாளரா, கதாநாயகர்களா ? கதை – நானா காரணம் ? கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன். இவ்வுலகில் அன்பு, காதல், சந்தோஷம், துக்கம், […]

இயக்குநர் சங்கருடன் இணையும் சிம்பு?

இயக்குநர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு இந்தியன் 2 . கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைய இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. அது வேறு யாரும் இல்லை நம் சிம்புதான். சங்கர் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது வதந்தியாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசினாலும், சிம்பு அவர்கள் சங்கர் படத்தில் நடித்தால் அவரின் மார்கெட் வேறு ஒரு தளத்திற்கு அவரை அழைத்து செல்லும் என சிம்பு ரசிகர்கள் சொல்கின்றனர். […]

மீண்டும் தன் இடத்தை பிடிக்கும் ஹாரீஸ் ஜெயராஜ் – தேவ் பட பாடல்கள்

தேவ் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்திற்கு இசை அமைக்கும் ஹாரீஸ் ஜெயராஜ் இந்த படத்திற்காக தந்துள்ள பாடல்கள் ஐந்து. பாடல்கள் ஹாரீஸ் ஜெயராஜ் ரசிகர்களை கவரும் என்றும், அவர் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பார் என்றும் படக் குழுவினர் கூறுவதாக செய்திகள் வருகின்றது.

விக்ரம் படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இந்த படத்தின் டீஸர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் வரும் ஜனவரி 15 பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக போச்டரில் தெரிவித்துள்ளனர். அதனால் படத்தின் டீசரை விஸ்வாசம் மற்றும் பேட்டயுடன் சேர்ந்து பார்க்கலாம் என்பது நமக்கு கிடைத்த மற்றுமொறு தகவல்.

சிறந்த நாவல் ஒன்று படமாகிறது – ழகரம்

தமிழில் பல விருதுகளை பெற்ற நாவலான பிராஜக்ட் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் நந்தா நடிக்கிறார் கவா கம்ஸ் எழுதிய மர்ம நாவல் பிராஜக்ட். இந்த நாவல் புதையலை தேடி செல்லும் ஒருவனின் கதை. பல விருதுகளை பெற்ற இந்த நாவல் ழகரம் என்ற பெயரில் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷ் இயக்கும் படத்திற்கு பிரச்சனை?

நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கும் புதிய படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் கூறப்பட்டது. இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்த பட்டுள்ளதாகவும், படம் மீண்டும் தொடருமா என்ற கேள்வி இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா, எமி ஜாக்ஸன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி?

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகள் நயந்தாரா மற்றும் எமிஜாக்ஸன். இருவரும் தங்கள் காதலர்களுடன் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். நயந்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்து வெளியிட்ட போட்டோ ரசிகர்களிடையே அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் எமிஜாக்ஸன் ஒரு படி தாண்டி தன்னுடைய காதலனுடன் கிஸ் அடிக்கும் போட்டோவை வெளியிட்டு தன்னுடைய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பதிவு செய்துள்ளார்

தயாரிப்பாளர் சங்கம் துணைதலைவர் மாற்றம்?

தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. இன்னிலையில் தலைவர் திரு விஷால் அவர்கள் துணைதலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் தான் அந்த துணை தலைவர். இதற்கு முன் இருந்த கெளதம் மேனன் திடீரென மாற்றப்பட்டதுக்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு விஷால் தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அதை நடத்தும் பொறுப்பை பார்த்திபன் அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news