2019-க்கான Zee திரைப்பட விருதுகள் நேற்று மும்பையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டன .

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வித்தியாசமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன், சோனம் கபூர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த அலங்கார அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர்.

பிரபல மூத்த நடிகையான ஹேமா மாலினி அழகிய சேலை அணிந்து வந்தார். மாதுரி தீக்சிட் இளம் நடிகைகளுக்குப் போட்டியாக மாடல் ஆடையுடன் வந்தார். முத்தாய்ப்பாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி சிவப்பு நிற கவுனில் மிகவும் அழகாக அனைவரையும் கவர்ந்தது.