காதலர் தினத்தில் வெளியாகும் விக்ரம் படத்தின் முதல் லுக்….

கோப்ரா படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் காதலர் தினத்தன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிய வேண்டிய நிலையில் சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் கோப்ரா படத்தில் 10 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களீல் நடித்து வருவதால் படப்பிடிப்பு தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கபட்ட நிலையில் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் விக்ரம்மின் கெட் அப் வெளியாகும் எனவும் தெரிகிறது. கோப்ரா படத்தை டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news