டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது.
இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது.