கடவுளின் தேயம் என அழைக்கப்படும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இன்னிலையில் பல நாட்களாக பெய்து வந்த கனமழை தற்போது ஓய்ந்ததால் கேரளா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்த மாநிலத்தின் 90 விழுக்காடு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மக்களுக்கு உதவ இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மழை குறைந்துள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு திரும்பி வருகின்றனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மாரு ஆக்கம் செய்வதற்கு அரசிற்கு பலர் நன்கொடை வழங்கிவருகிறார்கள்.
தமிழ் நாடு மட்டுமின்றி ஆந்திர, தெலுங்கானா, கன்னடா, மற்றும் உலக நாடுகளில் இருந்தும் கேரளாவிற்கு நன்கொடை வருகிறது. அந்த அந்த மாநில திரைபிரபலன்களும் கேரளாவிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் கேரளாவிற்கு 70 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதற்கு பொதுக்கள் உட்பட பலர் நடிகர் விஜய்க்கு பாராட்டுகளை தெறிவித்துவருகின்றனர். முன்னதாக இந்திய அரசை காட்டிலும் [500கோடி] துபாய் அரசாங்கம் [700கோடி] கேரளாவிற்கு அதிக பணம் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.