பிறந்தநாளுக்கு பரிசளித்த விஜய் ஆண்டனி படக்குழு!!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வள்ளி மயில்’. கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.என். தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக “வள்ளி மயில்” உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ‘வள்ளி மயில்’ கதாநாயகி ஃபரியா அப்துல்லா இன்று (21.06.2022) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஃபரியா அப்துல்லாவிற்கு ‘வள்ளி மயில்’ படக்குழு வாழ்த்து தெரிவித்து, அவர் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் விதமாக வெளியாகியிருக்கும் இப்போஸ்டரை சமூக வலைத்தளத்தில் படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.