மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்-ராம்குமார் கூட்டணி !!

இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி ராட்சசன் திரைப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்தார்.
இந்நிலையில் ராம்குமார்-விஷ்ணுவிஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது சினிமா ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கும் இந்தப் படம் குறித்து இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம்குமாருடன் மீண்டும் இணைவது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.