சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ சூப்பர் படத்தின் அப்டேட்…

 சிம்பு நடிக்கும் ‘பத்து தல’  சூப்பர் படத்தின் அப்டேட்…

சமீபத்தில் தந்தை டி.ஆரின். சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்த சிம்பு, தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது..

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.

கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி திரைப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கன்னடத்தில் இந்த படத்தில் ஹீரோவாக சிவராஜ் குமார் நடித்திருப்பார்.

45-50 வயது மதிக்கத்தக்க டான் கேரக்டரில் சிவராஜ்குமார் நடிப்பில் மிரட்டி எடுத்திருப்பார். பெரும் வரவேற்பை முப்தி படம் பெற்ற நிலையில் அதன் ரீமேக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பத்து தல படத்திற்காக சற்று வயதான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். அவர் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் மாஸ்ஸாக இருக்கும் என்பதால் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் காத்திருக்கிறது.

  • 8 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !