தமிழ் திரையின் மாபெரும் உரையாடல் ஆசிரியர் #ஆரூர்தாஸ் மறைந்தார்என்பதை அறிந்து வருந்துகிறேன்.காலமானார்தமிழ் திரையின் மாபெரும் உரையாடல் ஆசிரியர் #ஆரூர்தாஸ் மறைந்தார்என்பதை அறிந்து வருந்துகிறேன்.

 தமிழ் திரையின் மாபெரும் உரையாடல் ஆசிரியர் #ஆரூர்தாஸ் மறைந்தார்என்பதை அறிந்து வருந்துகிறேன்.காலமானார்தமிழ் திரையின் மாபெரும் உரையாடல் ஆசிரியர் #ஆரூர்தாஸ் மறைந்தார்என்பதை அறிந்து வருந்துகிறேன்.

ஏறக்குறைய 1000 படங்கள்…
இந்திய சினிமாவின் 100 வருட வரலாற்றில் இவர் பணியாற்றியது 60 ஆண்டுகள்…

திரை உலக ஜாம்பவான் இவர் என்றால் யாரும் மறுக்க முடியாது.

மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி , முதல் நடிகர் மோகன் , பூர்ணிமா வரை
இவர் வசனத்தைப் பேசாத நடிகர் நடிகைகள் இருக்க முடியாது.

ஒரு ‘பாசமலர்’ போதாதா இவரைப் பற்றி பேச?

ஒரு ‘விதி’ போதாதா இவர் சாதனை உரைக்க?

ஏராளமான வெள்ளிவிழா படங்கள்
எக்கச்சக்கமான 100 நாள் படங்கள்

மொழிமாற்றுப் படங்களைக் கூட மூலமொழிப் படம் போல் பேசவைத்தவர்.

ஒரு வாரம், 10 நாளில் முழுப்படத்திற்கும் வசனம் எழுதி முடித்துவிடுவார். வசனம் எழுதும்போது வார்த்தைகளை அல்ல வாழ்க்கையை எழுதினார்.

இயல்பான மொழியால்
அழகான உரையாடல் எழுதினார்.

எத்தனையோ பேர் அவர் எழுதியதைப் பேசினார்கள். இன்று அவர் மௌனமானார்.

காலம் இனி அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்.

போய் வாருங்கள் ஐயா…வணங்கி வழியனுப்புகிறோம்.

உங்கள் குரலைத் தமிழ்த் திரை மறக்காது. தமிழ்க் குடும்பங்கள் மறக்காது. தமிழ் மறக்காது.

உங்கள் சாதனையை இன்னொருவர் முறியடிக்க முடியாது.

பேச இயலவில்லை… கண்ணீர் முட்டுகிறது. கைகூப்புகிறேன்.
*
பிருந்தா சாரதி
திரைப்பட வசனகர்த்தா
*

 • 7 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !