கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கெளதம் மேனன் இயக்கத்தில், த்ரிஷா ஒரு குறும்படத்தில் நடித்து வந்தார். முழுக்க கெளதம் மேனன் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக சொல்ல, அதை வீட்டிலிருந்தபடியே ஷுட் செய்து அனுப்பினார். தற்போது டீஸரை வெளியிட்டுள்ளனர்.
டீசரை பார்க்கும் போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை போலவே உள்ளது. ஏனென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் பெயர்தான் கார்த்திக். மேலும் டீசரில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையும் சேர்ந்து வருகிறது
இந்த டீசர் வெளியானது முதல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.