சாதனை படைத்த டிஸ்கவரி..ரேட்டிங்கில் இரண்டாவது இடம்!

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட, ‘இன்டு த வைல்டு வித் பியர் கிரில்ஸ்’ டிவி நிகழ்ச்சி அதன் ஒளிபரப்பில் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

டிஸ்கவரி டிவியின் 12 சேனல்களில் இந்த ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளதாம். அந்த வகையான நிகழ்ச்சி ஒளிபரப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாம்.

40 லட்சம் தடப் பதிவுகளை இந்நிகழ்ச்சி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல கடந்த நான்கு வாரங்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை விட 86 சதவீதம் அதிகமான ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறதாம்.

அது மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக் 3.32 பில்லியன் பதிவுகள் மூலம் 1.41 பில்லியன் மக்களை சென்றடைந்திருக்கிறதாம்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news