சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்கக்கோரி கவர்னரிடம். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தாபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி 24ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கபோவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று பகல் 1 மணியளவில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாக உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி அரசுக்கு ஆபத்தா?
ஒருவேலை தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராக வந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்எல்ஏக்களாக தொடர்வார்கள். அவர்கள் சட்டசபையில் கூட்டங்களில் பங்கேற்களாம். அப்போது அவர்கள் எடப்பாடி அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால். அரசுக்கு எதிராக 123 பேர் வாக்களிக்கக்கூடும். இது தற்போதுள்ள எடப்பாடி அரசு
ஆட்சி கவிழும்
இதற்கிடையில் சட்டப்பேரவை இன்று முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.