Tags : Tamilnadu

Latest News News Tamilnadu

11 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சென்னை ஆலந்தூர், அடையாறு, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூரில் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணாநகர், ஆவடி, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. பட்டாபிராம், போரூர், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் காற்றுடன் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக […]Read More

Latest News politics

கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் […]Read More

Latest News politics

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு!

நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது . இது தொடர்பான அரசின் அறிவிப்பில், “ஆக்சிஜன் வசதியின்றி நோயாளிகளை அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் கூடுதலாக ரூபாய் 25 வசூலித்துக்கொள்ளலாம். ஆக்சிஜன் வசதியுடன் அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் அழைத்துச் செல்லும்போது கூடுதலாகும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூபாய் 25 […]Read More

Latest News politics

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?- தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் அடங்குவர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் […]Read More

covid19 Latest News politics

கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் தலைமை செயலாளர் இன்று

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் […]Read More

covid19 Latest News

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இதுவரை 41,72,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட 14,11,194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13,93,811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த 10 நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி […]Read More

Latest News News Tamilnadu

“கொரோனா பரவல் தடுப்பு பணி” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது கடந்த வாரம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !