தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் அதிகமாக இருந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது. மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. […]Read More
Tags : Stalin news
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் […]Read More
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் […]Read More
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பீதியைக் கிளப்புகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2.63 லட்சம் எனும் அளவிற்கு குறைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. மேலும் ஆக்சிஜன், படுக்கை, ரெம்டெசிவிர் எனப் பல்வேறு பற்றாக்குறைகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.இந்தப் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு பொது மக்கள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்தத் தொகை குறித்து தமிழக […]Read More
புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,14,950 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More
உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும். கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.Read More
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு: 1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் […]Read More
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று […]Read More