தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில் நிலவுகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை […]Read More
Tags : rain update
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கல்பாக்கத்தில் […]Read More
சென்னையில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சென்னை ஆலந்தூர், அடையாறு, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூரில் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணாநகர், ஆவடி, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. பட்டாபிராம், போரூர், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் காற்றுடன் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக […]Read More