நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ளார். மேலும், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரைம் திரில் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் “உன்ன நெனச்சு” ‘நீங்க முடியுமா” என்ற இரண்டு பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு […]