தமிழ் சினிமாவில் ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ‘நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்துள்ளார். இதனையடுத்து நடிகர் ஆதி தற்போது அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கும் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். நெப்போலியன், […]Read More
Tags : Ott
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி […]Read More
‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு […]Read More
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாகியின் OTT வெளியீட்டை தவிர்க்கும் தயாரிப்பாளர்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘குட் லக் சகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கடைசியாக ஈஸ்வர் கார்த்திக்கின் இயக்கத்தில் ‘பெண்குயின்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது வரவிருக்கும் படமான ‘குட் லக் சகி’ படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் கீர்த்தி தனது ட்விட்டரில் தனது கதாபாத்திரமான “சகி” தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ கொரோனா ஊரடங்கின் முன்பே தொடங்கப்பட்டது. […]Read More
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சுமோ’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படம், கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பிறகு, இப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், சுமோ திரைப்படம் […]Read More
நடிகை த்ரிஷாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர், ‘ ராங்கி ‘ இறுதியாக ஒரு வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது . தற்போதைய COVID-19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக பிரபலமான OTT மேடையில் படம் வெளியிடப்பட்டது என்பது சமீபத்திய சலசலப்பு . இப்படம் பெண்கள் மையமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியான படத்தின் டீஸர் மிகவும் தீவிரமான ஒன்றாகும் மேலும் நடிகை சில கனரக அதிரடி ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் […]Read More
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டது. கரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் […]Read More
ஓடிடி-யில் ‘கோப்ரா’ திரைப்படம் ரிலீசா?தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை {Netflix} […]Read More