நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் படம் புதிய சாதனையைப் படைத்தது. இந்த நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘பகையே காத்திரு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, மணிவேல் இயக்குகிறார். படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் வித்யா பிரதீப் முக்கியக் கதாபாத்திரங்களில் […]Read More
Tags : movie poojai
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் – தெலுங்கு மொழி ரீமேக் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்ததாக க்ரைம் த்ரில்லர் எனக் கூறப்படும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் ஐஸ்வர்யா கேப் டிரைவராக நடிக்கிறார் ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாரிக்கிறார். […]Read More