Tag Archives: inandout technology

கார்டோசாட்-2 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ அனுப்பிய 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. பூமியை கண்காணிப்பதுடன், உயர் தரத்திலான புகைப்படங்களை எடுத்து அனுப்பும். வானில் மேக்கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படும் எடுத்து அனுப்பும் . இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள […]

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

செப்.,25 ம் தேதியன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று […]

புதிய ஐபோன்கள் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அறிமுகம் செய்துவைத்தார். ஐபோன் 11 மாடல், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே கொண்டது. நிறம் மாறாது, அழுக்கடையாது, ஸ்கிராட்ச் ஏற்படாது என்பன போன்ற […]

ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல முயற்சி…

ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கலன், நிலவில் தரை இறங்குவதற்கான லேண்டர் விக்ரம், ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய மூன்று பாகங்களைக் கொண்டது சந்திரயான் 2. நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், ஆர்பிட்டர் சுற்றி வரும் நிலையில், விக்ரம் லேண்டரை தரை இறக்கும் செயல்பாட்டை சனிக்கிழமை அதிகாலை இஸ்ரோ மேற்கொண்டது. நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் இருந்த போது, தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது. ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் […]

ஒப்போ ரெனோ 2, 2Z 5ஜி ஸ்பெசிபிகேஷன்!!

ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அதன் மூன்று புதிய ரெனோ 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த 5ஜி மாடல் ஆனது 6.6 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது முன்னதாக வெளியான ரெனோ 10 எக்ஸ் ஸூம் / ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் கொண்டிருந்த அதே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. புதிய 5ஜி மாடல் ஆனது 3,930 எம்ஏஎச் என்கிற பேட்டரி திறனை கொண்டுள்ளது. இதுவும் முந்தைய மாடலில் காணப்பட்ட அதே பேட்டரித்திறன் தான் என்பதை குறிப்பிட […]

5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் ஓட்டுநரில்லா மின்சார டிரக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்நாட்டைச் சேர்ந்த ஐன்ரைடு என்ற நிறுவனம் இந்த மின்சார டிரக்கை தயாரித்துள்ளது. இது 26 டன் எடை கொண்டது. கேமராக்கள், ரேடார், முப்பரிமாண சென்சார்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இந்த டிரக்கில் உண்டு. டிரக்கில் உள்ள தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் 5ஜி மூலம் இயங்கக் கூடியவை. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. ஆனால் […]

எப் 21 போர் விமானம் : ஒப்பந்தத்தை பெற போட்டி!!

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.  இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். […]

தடையை தாண்டி செயல்படிக்கு வந்த டிக்டாக் !

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை […]

e Mail-Inbox செயலியின் சேவையை நிறுத்தியது Gmail

ஜிமெயில் நிறுவனம் வழங்கிவந்த சேவைகளில் ஓன்று ‘இன்பாக்ஸ் செயலி’. தற்போது அந்த சேவையை, நிரந்தரமாக நிறுத்தியுள்ளது அந்நிறுவனம். இருப்பினும் சில பயனர்களுக்கு இன்னும் அந்த சேவை தொடர்வதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதியுடன் e Mail-Inbox சேவை நிறுத்தப்பட உள்ளதாக Gmail நிறுவனம் கடந்த ஆண்டே அந்நிறுவனம் அறிவித்தது. நிலையில், சில ஐ.ஓ.எஸ் மற்றும் பழைய ஆண்ட்ராய்டு போன்களின் பதிப்புகளில் இந்த சேவைக்கான வெப் வெர்சனை பயன்படுத்தி வந்தவர்களுக்கு சேவை இன்னும் முடக்கப்படவில்லை. அதுபற்றி அந்த […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news