Tag Archives: inandout cinema technology

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., – சி48

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, ‘பி.எஸ்.எல்.வி., – சி48’ என்ற ராக்கெட்டை, இன்று (டிச.,11) இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. வெளிநாட்டு செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், ‘ரிசாட் – 2 […]

கார்டோசாட்-2 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ அனுப்பிய 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. பூமியை கண்காணிப்பதுடன், உயர் தரத்திலான புகைப்படங்களை எடுத்து அனுப்பும். வானில் மேக்கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படும் எடுத்து அனுப்பும் . இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள […]

தமன்னா புது முடிவு!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளில் தமன்னாவும் ஒருவர். அவர் நடித்துள்ள பெட்ரோமேக்ஸ் படம், தீபாவளிக்கு ரிலீசாகும் பிகில் படத்திற்கு போட்டியாக வருகிறது. இந்நிலையில், தமன்னா கடைசியாக நடித்த தேவி 2, ஹிந்தியில் நடித்த காமாஷி போன்ற படங்கள் தோல்வி அடைந்ததால், அதிக வருத்தத்தில் இருக்கிறார். இதனால், அவர் தான் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்து சில திட்டங்களைத் தீட்டி அதன்படி செயல்பட முடிவெடுத்திருக்கிறார். அதாவது, கதை பிடித்திருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளப் போகிறாராம். கதை […]

ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று […]

பத்தே நாட்களில் 400 கோடி ரூபாயை தொட்டு, வசூலில் பின்னி எடுக்கும் “சாஹோ” !

டோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத நட்சத்திர அந்தஸ்த்தும் , UV Creations ன் மிகப் பிராமாண்டத் தயாரிப்பும் உலகளவில் “சாஹோ” படத்தை, சரித்திரம் படைக்கும் படமாக மாற்றி வருகிறது. இந்த வெற்றிப்பயணத்தின் அடுத்த மகுடமாக, ஆக்ஸ்ட் 30 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியான “சாஹோ” உலகளவில் பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி மீண்டும் ஒரு சரித்திர சாதனை படைத்திருக்கிறது. மிகப்பெரிய வரவேற்புடன் களமிறங்கிய “சாஹோ” […]

புதிய ஐபோன்கள் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அறிமுகம் செய்துவைத்தார். ஐபோன் 11 மாடல், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே கொண்டது. நிறம் மாறாது, அழுக்கடையாது, ஸ்கிராட்ச் ஏற்படாது என்பன போன்ற […]

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை – இஸ்ரோ

சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ஆம் தேதி அதிகாலை  நடைபெற்றது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக லேண்டர் இருப்பதாகவும், அதேநேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இஸ்ட்ராக் (ISTRAC) எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை, […]

எப் 21 போர் விமானம் : ஒப்பந்தத்தை பெற போட்டி!!

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.  இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். […]

அமேசான் அனுப்ப இருக்கும் செயற்கை கோள் – “புரோஜெக்ட் குய்பெர்”

அமேசான் நிறுவனம் அண்மையில் 3,000 இன்டர்நெட் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பம் திட்டத்தை அறிமுகம் படுத்தியுள்ளது. இதற்கு “புராஜெக்ட் குய்பெர்’ என்று பெயர் சூட்டியது. அமேசானின் நீண்ட கால திட்டத்தின் கீழ் அடிப்படையான இன்டர் நெட் வசதி இல்லாதவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 3000 இன்டர்நெட் செயற்கைகோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்துவதே எந்த திட்டத்தின் முடிவு. இதற்காக தகவலை அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news