சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக லேண்டர் இருப்பதாகவும், அதேநேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இஸ்ட்ராக் (ISTRAC) எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை, […]