Tag Archives: inandout cinema new movies

வெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ !

வெங்கட் பிரபு சிம்புவை ஹீரோவாக வைத்து ‘மாநாடு’ படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் நடைபெற தாமதமானது. அந்த படம் சிம்பு தவிர்த்து வேறு நடிகரை வைத்து தொடங்கப்படும் என்பது போன்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இந்தநிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது பிரபல நடிகர் வைபவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். அரோல் குரோலி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த […]

வைரலாகும் தனுஷின் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர்!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். இந்த கூட்டணியில் முதன்முதலில் வெளியான படம் பொல்லாதவன். ஆனால் அதற்கு முன்னரே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ எனும் திரைப்படம் கைவிடப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும் […]

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் ஓடிடி-யில் நேரடி ரிலீசா?….

பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை போன்று இந்தப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக […]

கர்ப்பிணி மனைவியை விட்டு சென்ற நடிகர் சிரஞ்சீவி சார்ஜா…!

நடிகர் அர்ஜுனின் உறவினரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு  இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் […]

கீர்த்தி சுரேஷுக்காக இணையும் 4 முன்னணி நடிகைகள்

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘பெண்குயின்’. ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 19-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. டீசரை யார் யார் வெளியிடப்போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இது பெண்களை மையமாக […]

பிரபல இயக்குனர் படத்தில் சூர்யா!

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படம் கடந்த மாதமே திரைக்கு வர இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது. ‘சூரரைப்போற்று’ படம் எப்போது திரைக்கு வரும் என்று அறிவிக்கப்படாத நிலையில், சூர்யா நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய அடுத்த படத்தை பாண்டிராஜ் டைரக்டு செய்ய இருக்கிறார். மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருவா படத்திலும் சூர்யா […]

லாஸ்லியாவின் முதல் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். “பிரண்ட்ஷிப்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். இந்நிலையில் “பிரண்ட்ஷிப்”  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

டாம் க்ரூஸ் உருவாக்கும் கொரோனா ஃப்ரீ நகரம்! எல்லாம் ஒரேயொரு படத்துக்காக!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் திரைப்பட பணிகள் முடங்கியுள்ள நிலையில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் ஹீரோக்களில் முக்கியமானவர் டாம் க்ரூஸ். இவர் நடித்து வெளியாகும் ‘மிஷன் இம்பாஸிபிள்’ பட வரிசைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஆறாம் பாகம் 2018ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் மிஷன் இம்பாஸிபிள் ஏழாம் பாகம் படப்பிடிப்புகள் […]

சாந்தனுவுக்கு சான்ஸ் கொடுத்த கெளதம் மேனன்!

இளம் தலைமுறையின் காதல், பாசம், நேசம், வலி முதலானவற்றைப் படமாக்குவர்களில் ஒருவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரவர் ஸ்டைலை தங்கள் படங்களில் கல்வெட்டுகள் போல் பொறித்தார்கள். ‘இது இன்னாருடைய படம்’ என்று முத்திரை பதித்தார்கள். அந்தவகையில், முத்திரை பதித்த இயக்குனர் பட்டியலில் சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் […]

ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி? – கங்கனா விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு […]
Page 1 of 15712345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news