Tag Archives: inandout cinema latest

வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம்…

நிஜார் டைரக்டு செய்யும் முதல் தமிழ் படத்துக்கு, ‘கலர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், புதுமுகம் ராம்குமார் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். வரலட்சுமி சரத்குமார், இனியா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய வேடத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கிறார். வினாடிக்கு வினாடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பயங்கர திகில் படமாக ‘கலர்ஸ்’ தயாராகி வருகிறது. எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைக்கிறார். ஆஷி இட்டிகுலா தயாரிக்கிறார். படப்பிடிப்பு கேரளாவில் நடை பெறுகிறது.

மாதவனை வியக்கவைத்த அனுஷ்கா!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், மாதவன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், நிசப்தம். படம் குறித்து, மாதவன் கூறுகையில், ”நான் நடித்த, ரெண்டு படத்தின் மூலமாகத்தான், அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். பின், இந்த நிசப்தம் படத்தில், சேர்ந்து நடித்தோம். இடையில் பெரிய அளவில், தன் திறமையை வளர்த்திருக்கிறார் அனுஷ்கா,” என்றார்.

பஹிரா படத்தின் மிரட்டலான போஸ்டர்!

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார்.  இந்நிலையில் தற்போது பிரபுதேவா வைத்து பஹிரா என்ற புது படத்தை இயக்கி வருகிறார். காதலர் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

தளபதி’ விஜய்யின் ஒரு குட்டி கதை முதல் சிங்கிள்..

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக […]

’ஒரு குட்டிக்கதை’ பாடல் ஜெயில் காட்சியிலா?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே இந்த பாடலை வரவேற்க இப்போதே விஜய் ரசிகர்கள் தயாராகி விட்டனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இந்த பாடல் குறித்து அனிருத் வெளியிட்ட […]

லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா? ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..!

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் “ஓ மை கடவுளே” என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாகவாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் -ரித்திகா சிங் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் […]

விஜய்க்கு போட்டியாக சிம்பு: கோலிவுட்டில் பரபரப்பு…

விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யே இந்த பாடலை பாடி இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி விஜய்க்கு சமீப காலமாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை அடுத்து வெளியாக உள்ள பாடல் என்பதால் இந்த பாடலை அவரது ரசிகர்கள் சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளனர்  இந்த நிலையில் இன்று மாலை விஜய் பாடல் […]
Page 1 of 8112345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news