சென்னை அருகே தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, திரிசூலம், சேலையூர், முடிச்சூர், செம்பாக்கம், கீழ்கட்டளை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் பல இடங்களில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழை கொட்டியதால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை […]