தமிழில், சமந்தா கடைசியாக நடித்த படம் ‛சூப்பர் டீலக்ஸ்’. அதன்பிறகு தெலுங்கில் மஜிலி, ஓ பேபி, 96 ரீமேக் படங்களில் நடித்தவர், தற்போது, ‛தி பேமிலி மேன்-2′ வெப்சீரியலில் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஜீ சினி விருது விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சமந்தாவிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு பிங்க் நிற புடவையில் வந்திருந்தார் சமந்தா. அதோடு கவர்ச்சிகரமாக ஒரு போட்டோ ஷூட்டும் நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகின. […]