Tag Archives: inandout cinema latest news

மாநாட்டில் சிம்புவுக்கு வில்லன் இவரா,!?

நடிகர் சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி திடீரென நிறுத்தப்பட்டது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் […]

வலிமை Updates :முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித்…

கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் வலிமை படத்திலும் போலீசாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அஜித். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புத்தாண்டிற்கு பின் சென்னையில் நடைபெறுகிறது. வலிமை படத்தில் இதுவரை அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகளே படமாக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தபடியாக கதாநாயகி மற்றும் கேரக்டர் நடிகர் நடிகைகளுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ஆரவ்வின் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த் சிறப்புத் தோற்றம் !

ஆரவ், ஆஷிமா நர்வால்  நடிப்பில் உருவாகியிருக்கும் “ராஜபீமா” திரைப்படம் 2020 ஆம் வருடத்தின் எதிர்ப்பார்க்குரிய  படங்களில் ஒன்றாக ஆகியிருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் கலந்து கட்டி கச்சிதமாக இருந்ததே, இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியதற்கு காரணம். இப்போது மேலும் ஒர் ஆச்சர்யமாக யாஷிகா ஆனந்தின் சிறப்புத்தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியிருக்கிறது. இயக்குநர் நரேஷ் சம்பத் இது குறித்து கூறியதாவது…. ஆம்,  இப்படத்தில் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். […]

லேடி சூப்பர் ஸ்டார் காதலர் விக்கியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள்..

நயன்தாரா அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுபவர். இந்நிலையில் அவர் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்படங்களில் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, சூப்பர் அன்பான இயக்குநரே. புகைப்படங்களை வெளியிடுவது எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக இப்படி புகைப்படங்கள் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். […]

ரஜினி 168 : கிராமத்து பெண்ணாக மீனா

ரஜினியின் ‛தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது. இதையடுத்து, அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 168வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து படங்கள் இயக்குவதில் சிவா ஒரு ஸ்பெஷலிஸ்ட். எனவே இதுவும் ஒரு கிராமத்து படமாக தான் இருக்கும் என கூறப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீனா […]

தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஊட்டியில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது. மற்ற பகுதிகளில் வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிரகணம் விலகியதும், முழுமையாக சூரியனை பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுகிறது. […]

தமிழகத்தில் தலைமை சிறப்பு: சரத்குமார்

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ள ‛வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, மடோனா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உடன் நடித்துள்ளார் சரத்குமார். இவர் கூறுகையில், ‛ஐயா, சூர்யவம்சம்‛ படம் போன்று இப்படம் இருக்கும். நடிகர் சங்க கட்டடம் பாதியில் நிற்பது சங்கடமாக உள்ளது. நான் உதவ நினைத்தாலும் முடியாது. திரைத்துறையில் இப்போது சூழ்நிலை சரியில்லை. சிறப்பு அதிகாரி நியமிக்கும் அளவுக்கு போனது வருத்தமே. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுகிறேன். ‛போடா போடி’ பட பிரச்னை சமயத்தில் வரலட்சுமிக்கு […]

பிந்து மாதவிக்கு கை கொடுப்பாரா மாயன்

அழகும், திறமையும் இருந்தால் மட்டும் போதாது சினிமாவில் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் பிந்து மாதவி. சமீபகாலமாக அவர் நடிப்பில வெளியான எந்தப் படமும் அவருக்கு பலன் தரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு சென்றவர். அப்படியே அங்கு சீரியலில் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் தற்போது அவர் மாயன் என்ற திகில் பேண்டஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் […]

ஒருவரை காதலித்து பிரிந்துவிட்டேன் – கண் சிமிட்டல் நடிகை…

ஒரே ஒரு கண் சிமிட்டல் வீடியோவால் பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் ஒரே இரவில் பிரபலமானதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்படி அது நடந்தது என்றும் புரியவில்லை. அந்த 30 நொடி காட்சி வெளியானபோது நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்துவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை அந்த வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றதை நம்ப முடியவில்லை. சமூகவலைதளங்களில் என்னை பின் தொடர்ந்தவர்கள் ஒரே நாளில் லட்சக்கணக்கை தாண்டினார்கள். […]
Page 10 of 176« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news