Tags : DMK

politics

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மருத்துவ நிபுணர் […]Read More

Latest News politics

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் […]Read More

Latest News politics

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  2,14,950 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More

Latest News politics

முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு: 1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் […]Read More

Latest News politics Tamilnadu

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாயும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். […]Read More

covid19 Latest News

தேர்தல் வெற்றியை கொண்டாட தடை- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 2-ந்தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி […]Read More

Latest News politics

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]Read More

Election 2021 Latest News politics

தேர்தல் களம் 2021: சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு ?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !