Tags : Corona News

Latest News politics

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் […]Read More

Latest News politics

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு […]Read More

cinema Tamil cinema

“அவர் கணவரை பற்றி மிகவும் பெருமையாக நினைத்தார்” – ஹிப்ஹாப் தமிழா உருக்கம்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்றால் காலமானார். இவருக்கு சமீபத்தில் […]Read More

cinema

ரூபாய் 1 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கிய அதிமுக!

தமிழக முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூபாய் 1 கோடி அளிக்கப்படும் என்று ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அறிவித்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (17/05/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளிக்கப்படும். […]Read More

cinema Tamil cinema

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த விக்ரம்!

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக […]Read More

cinema Latest News Tamil cinema

கரோனா இரண்டாம் அலை எதிரொலி! படப்பிடிப்புகள் ரத்து!

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் […]Read More

Latest News politics

கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் […]Read More

Latest News politics

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு!

நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது . இது தொடர்பான அரசின் அறிவிப்பில், “ஆக்சிஜன் வசதியின்றி நோயாளிகளை அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் கூடுதலாக ரூபாய் 25 வசூலித்துக்கொள்ளலாம். ஆக்சிஜன் வசதியுடன் அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் அழைத்துச் செல்லும்போது கூடுதலாகும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூபாய் 25 […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் பட நடிகர் கரோனாவால் மரணம்!

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த பிரபல துணை நடிகர் மாறன் மரணமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்துவரும் மாறனுக்கு சமீபத்தில் கரோனா […]Read More

Latest News News Tamilnadu

“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்!

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !