Tags : cinema update

cinema Indian cinema Latest News News

விக்ரம் பிரபு-விதார்த்தின் ‘இறுகப்பற்று’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்!!

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இறுகப்பற்று’. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் ‘இறுகப்பற்று’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Read More

cinema Indian cinema Latest News News

”வரும்போதே தெரியனும் .. வர்ர சிங்கம் யாரு”ன்னு- கவனம் ஈர்க்கும் #ஜவான் பாடல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் […]Read More

cinema Indian cinema Latest News News

சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியிருக்கும் கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கயல் ஆனந்தி தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘ஒயிட் ரோஸ்’. இப்படத்தை இயக்குனர் சுசி கணேசனிடம் முன்னாள் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை […]Read More

cinema Indian cinema Latest News News

ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்!

இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஹிந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த இடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துலிபெலா’ என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ […]Read More

cinema Indian cinema Latest News News

நெட்ஃபிளிக்ஸில் முதல் இடம் பிடித்த #மாமன்னன் திரைப்படம்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை […]Read More

cinema Indian cinema Latest News News

வருகிறார் ஆண்டனி தாஸ்..சஞ்சய் தத் பிறந்தநாள் பரிசாக லியோ படக்குழு வெளியிட்ட விடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்து என்ன..? ட்ரெண்டாகும் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் […]Read More

cinema Indian cinema Latest News News

பீஸ்ட் தோல்விப் படமா? நெல்சனுக்கு படம் கொடுக்கனுமானு யோசிங்க!?ரஜினியின் வைரல் பேச்சு!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது, “நெல்சன் […]Read More

cinema Indian cinema Latest News News

டபுள் ஐஸ்மார்ட்: ராம் பொதினேனி படத்தில் இணைந்த சஞ்சய் தத் !! வைரலாகும்

தென்னிந்தியாவில் பிரபல வில்லனாக மாறியுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் , ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார்ட் படத்தில் நடித்துள்ளார் . பான்-இந்தியன் படத்தில் நடிகர் பிக் புல் வேடத்தில் நடிக்கிறார். நடிகரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது மற்றும் அவரை அல்ட்ரா-ஸ்டைலிஷ் நடத்தையில் காட்டுகிறது. சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி, தயாரிப்பாளர்கள் பெரிய அறிவிப்பை வெளியிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். கறுப்பு உடையில், அவரது கதாபாத்திரம் ஒரு வேடிக்கையான சிகை அலங்காரம், தாடி மற்றும் மோதிரங்கள், ஒரு நேர்த்தியான கடிகாரம் மற்றும் ஒரு பச்சை குத்தப்பட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் லுக்கில் வெளியான தனுஷின் சூப்பர் கூல் போஸ்டர் !! ட்ரெண்டிங்கில் ‘கேப்டன்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !