Tags : cinema update

cinema Indian cinema Latest News News

வீடியோ வெளியிட்டு ‘தனி ஒருவன் 2’ அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!!

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், […]Read More

cinema Indian cinema Latest News News

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!!

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’. இதில் பான் […]Read More

cinema Indian cinema Latest News News

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனத்தில் வசித்து வருகின்றனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வந்த இவர், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. […]Read More

cinema Indian cinema Latest News News

வரமொற ஒடச்சிட செட் ஆனவன்.. ரசிகர்களை தொடர்ந்து வைபில் வைத்திருக்கும் ஹுக்கும்!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை […]Read More

cinema Indian cinema Latest News News

#ஜவான் டிரெய்லர் லைவ் அப்டேட்: வெளியான கரண் ஜோஹரின் முதல் ரிவியூ!!

கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ஜவான் முன்னோட்டத்தை கைவிட்டதில் இருந்து ஷாருக்கான் ரசிகர்கள் ஜவானின் டிரெய்லருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அறிக்கைகள் படி, இன்று ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஜவான் டிரெய்லரை ரசிகர்கள் விருந்தளிக்கலாம் என்று தெரிகிறது.  இதற்கிடையில், கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் ‘நூற்றாண்டின் டிரெய்லரை’ பார்த்ததாகக் கூறினார். அவர் ஷாருக்கானின் ‘ஜவான்’ பற்றி பேசுகிறாரா? என்று ஆர்வமாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய்சேதுபதி, […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவி-நயன்தாராவின் ‘#இறைவன்’ பட அப்டேட்!!

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘இறைவன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் […]Read More

cinema Indian cinema Latest News News

WorldDwarfGames2023-ல், தங்கம் வென்றவர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி !!

உதயநிதி தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவர்.  அமைச்சர் உதயநிதி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வரும் #WorldDwarfGames2023-ல், புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டியைச் சேர்ந்த தம்பி பாலசுப்பிரமணியம், பாட்மின்டன் பிரிவில் தங்கம் வென்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம், என தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இப்போட்டியில் அவர் பங்கேற்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை […]Read More

cinema Indian cinema Latest News News

எழுந்து வா இமயமே! பாரதிராஜா முன் பாட்டு பாடி மீண்டு வர சொன்ன

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தின் புதிய போஸ்டர்!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “வாத்தி” திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனது 3வது படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் அருண் மாதேஸ்வரன். இவர் தனது முதல் படமான ‘ராக்கி’ என்ற படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பின்னர், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் வெளியான […]Read More

cinema Indian cinema Latest News News

ஜி.வி.பிரகாஷுக்காக களமிறங்கிய ‘குட்நைட்’ இசையமைப்பாளர்!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜப்பான்’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !