Tags : celebritie update

cinema Indian cinema Latest News News

அஜித் வீடு முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்! – ட்ரெண்டாகும் வாழ விடுங்க

நேற்று நடிகர் அஜித் வீடு முன்பாக இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த பெண்ணை தடுத்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த பெண் பெயர் ஃபர்ஸானா என்பதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சில நாட்கள் முன்னதாக தனியார் மருத்துவமனைக்கு அஜித் சென்றிருந்தபோது அவருடன் இந்த பெண் செல்பி எடுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

பிகினி உடையில் வித்யூலேகா… வைரலாகும் போட்டோஸ்!

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகை வித்யூலேகா, கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் […]Read More

cinema hollywood cinema Latest News News

இயக்குநர் ராமின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராம், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை இயக்கி, தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், அடுத்தாக நிவின் பாலியை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.  இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (04.10.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, யுவன் இசையமைக்கிறார். தனுஷ்கோடியில் நடைபெற்ற பூஜை […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடித்துள்ளா ‘#டாக்டர்’ படத்தின் கிலிம்ப்ஸ் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை, ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘தளபதி 65’படத்தினையும் நெல்சன் இயக்கி வருவதால் டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திலிருந்து ‘செல்லம்மா செல்லம்மா’, ‘So Baby’, நெஞ்சமே என மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

இங்கிலாந்து சர்வதேச விருதுக்கு போட்டியிடும் ஆர்யா படம்!

சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘மகாமுனி’. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும், வணிக ரீதியாக படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக ‘மகாமுனி’ சினிமா ரசிகர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் ‘மகாமுனி’ திரைப்படம் வென்றுவருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் பூடானில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் […]Read More

cinema Indian cinema

ரிலீஸில் இருந்து திடீரென பின்வாங்கிய விஷால் படம்! ஏன் தெரியுமா ?

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து ‘எனிமி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. இதையடுத்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது. இப்படம் ஆயுத பூஜை தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த மிர்ச்சி சிவா பட ஃபர்ஸ்ட் லுக் இதோ!

இயக்குநர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காசேதான் கடவுளடா’. கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகிவருகிறது. ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா, குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் சாமியார் தோற்றத்தில் யோகி பாபு இருக்கும் புகைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை […]Read More

cinema Gossip Latest News News

சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. ஆமீர்கானை

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை […]Read More

cinema hollywood cinema Latest News News

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் மகன்! ஜாமீன் கிடைக்குமா?

ஒரு பரபரப்பான வளர்ச்சியில், பாலிவுட் மெகா ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தயாரிப்பாளர் கriரியின் மகன் ஆர்யன் கான், போதை மருந்து நுகர்வு, விற்பனை மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆர்யனைத் தவிர, சனிக்கிழமை-ஞாயிற்றுக்கிழமை என்சிபியால் ஆடம்பர பயணக் கப்பலில் ஒரு ரேவ் பார்ட்டியை வியத்தகு முறையில் முறியடித்தது தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்சிபி, தனது கைது குறிப்பில், ஆரியக் கான் போதைப்பொருள் மற்றும் மனோதத்துவ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !