Tags : celebrate News

cinema Indian cinema Latest News News

‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

மாதவன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா (தமிழில்) சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரைபிரபலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டியிருந்தனர்.  இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

செல்வராகவன் நடிக்கும் #பகாசூரன்…  புதிய அப்டேட் கொடுத்த மோகன் ஜி!!

பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் அறிவிப்பு; ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஜி 5 நிறுவனம் தங்களுடைய ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ள 10 இணைய தொடர்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் அமீர் – வெற்றிமாறன், வசந்தபாலன், ஏ.எல் விஜய், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் பலர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகும் இணைய தொடர்களும் அடங்கும். இதில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணைய தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தரன் குமார் […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

‘ஏகே 61’ படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்!!வெளியான புதிய அப்டேட்!

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார், அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி […]Read More

cinema Gossip Latest News News

ஆமிர் கான் மற்றும் கரீனா கபூர் கான் நடிக்கும் லால் சிங் சத்தாவின்

ஆமிர் கான் இதயங்களைத் தொடும் தனக்கே உரிய வழியைக் கொண்டுள்ளார், மேலும் அவர் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறார். அவர் தனது வரவிருக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தில் இதைத்தான் செய்து வருகிறார் . பாலிவுட்டின் மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் மூலம் அவரது சுவாரஸ்யமான டிரெய்லர் மற்றும் ஆன்மாவைத் தூண்டும் ஆடியோ டிராக்குகள் மூலம் பெரும் சலசலப்பை உருவாக்கி வருகிறார். இப்போது, ​​​​லால் சிங் சத்தா மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார், […]Read More

cinema Indian cinema Latest News News

குஸ்திக்கு தயாரான விஷ்ணு விஷால் – வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’ என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் முரளி கார்த்திக் இயக்கும் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்துமுடித்துள்ள விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ‘மோகன்தாஸ்’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. பின்பு சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் டைட்டில் மோஷன் […]Read More

cinema Gossip Latest News News

சிவகார்த்திகேயன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெய்-அதுல்யா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ஜெய், அதுல்யா ரவி நடித்த திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய், அதுல்ய ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, ஜி மாரி முத்து உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’எண்ணித்துணிக’. வெற்றிச்செல்வன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரமாஸ்த்ரா படத்தின் #கெசாரியா பாடல்

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்துள்ள பிரம்மாஸ்திரா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை நான்கு மொழிகளிலும் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு, பிரம்மாஸ்திராவின் கேசரியா பாடல் வெளியிடப்பட்டது, மேலும் பாடல் வெளியீட்டிற்கு முன்பு, அலியா பட், அயன் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட #லிகர் படத்தின் ட்ரைலர் அப்டேட் !!

விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்தின் பெரிய அப்டேட் இங்கே. லிகர் படத்தின் ட்ரெய்லர் ஜூலை 21 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. குத்துச்சண்டை வளையத்தில் விஜய்யின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. ரசிகர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை மற்றும் டிரெய்லர் வெளியீட்டிற்கான கவுண்ட்டவுனை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !