கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூரி வரை பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Read More