மும்பைக்கு சென்றது சென்னை அணி! காரணம் இதுதான்?

 மும்பைக்கு சென்றது சென்னை அணி! காரணம் இதுதான்?

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது.

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் தற்போது இதிலிருந்து ஐபிஎல் லீக் தொடருக்கு தயாராகி வருகின்றது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்பே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்து பயிற்சியில் பங்கேற்று வந்தது. இந்நிலையில் தற்போது வருகிற 26ம் தேதி (நாளை) மும்பை செல்ல திட்டமிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பே பயிற்சியை ஆரம்பித்து விட்டது. வலைப்பயிற்சியில் மகேந்திர சிங் தோனி , அம்பத்தி ராயுடு , ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் , ருத்ராஜ் , கரன் ஷர்மா , சாய் கிஷோர் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

இதையடுத்து போட்டிக்காக சென்னை அணி இப்போது மும்பைக்குக் கிளம்பி சென்றுள்ளது.

  • 11 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !