தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
மிகவும் பிரசித்தி பெற்ற ‘திருவாரூர் தியாகராஜர் ‘ கோவில் ஆழித்தேரோட்டம்!

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆகும்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் ( இன்று ) நடைபெற உள்ளது.

நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரிய கொடியேற்றம் சுவாமி வீதி உலாவுக்குப்பிறகு தியாகராஜர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, “ஆழித்தேரோட்டம் நடைபெறவுள்ளதையொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதைத் தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும்.பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் முன் முகக்கவசம் அணிந்து வரவும். வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.