பங்குனி உத்திரம்…தெய்வ மாதம் !

 பங்குனி உத்திரம்…தெய்வ மாதம் !

பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம்.ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு.

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது. தை மாதத்தில் பூசமும் வைகாசி மாசத்தில் விசாகமும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் ஆடி மாதத்தில் கிருத்திகையும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் விசேஷமான நாட்களாகப் போற்றப்படுகிறது. அதேபோல், பங்குனி மாதத்தில், உத்திர நட்சத்திர நாள் விசேஷ நாளாக, புண்ய தினமாகப் போற்றி வணங்கி ஆராதிக்கப்படுகிறது. பங்குனி உத்திர நன்னாளில்தான் எண்ணற்ற தெய்வங்களுக்கு திருமணங்கள் நடந்தேறின என்று புராணங்கள் விவரிக்கின்றன.

வருகிற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம். அற்புதமான இந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று சிவனாரையும் அம்பாளையும் கண்ணாரத் தரிசிப்போம். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். பெருமாள் சேவை சாதிக்கும் கோயில்களுக்குச் செல்வோம். தாயாரையும் பெருமாளையும் துளசி மாலை சார்த்தி வேண்டுவோம். மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்வோம்.பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். தனம் தானியம் பெருகும். இல்லத்தில், தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 • 26 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !