வெய்யோன் சில்லி… சூரரை போற்று பாடல் ரிலீஸ்!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் ப்ரோமோ spicejet boeing 737 ரக விமானத்தில் சென்று நடுவானில் ரிலீஸ் செய்துள்ளனர். இதுவரை விமானம் ஏறாத 100 குழந்தைகளை இந்த விமானத்தில் அழைத்து சென்று அவர்களது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.  

சற்றுமுன் இந்த பாடலை படக்குழு ட்விட்டரில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். பெருவாரியான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதோ அந்த பாடல் ப்ரோமோ.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news