திரையுலகினருக்கு மட்டும் தான் இந்த நிலைமையா? பிரபல ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆன்லைனில் தனக்காக ஒரு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். அதன் பார்சலை அவர் திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போஸ் கம்பெனி ஹெட்போன் ரூபாய் 18000 அமேசானில் ஆர்டர் செய்ததற்கு; அவர்கள் அனுப்பியது வெறும் இரும்பு கம்பி.. அதை எடைக்கு போட்டால் கூட 10 ரூபாய் தேராது.. ஆனால் அதை போஸ் கம்பெனியின் பாக்ஸிலேயே அழகாக பேக் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் ஆப்பிள் கம்பெனியின் போன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கும் இதேபோன்று ஏமாற்றம் நடந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது போன்ற தவறுகளை அந்த நிறுவனம் சரி செய்து கொள்ளுமா இல்லை தவறுகள் தொடருமா என்பது ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் மக்களுக்கு சந்தேகத்தை உண்டு செய்திருக்கிரது.