செல்வராகவன் புதிய பட அறிவிப்பு!

துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7.10 மணிக்கு வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 13ஆம் தேதி நாளை வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news