‘எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..’ஆர்யா நடிக்கும் “சார்பட்டா”

பா ரஞ்சித் வளர்ந்துவரும் இய்யக்குனர்களில் ஒருவராவார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  விரைவில் வெளியாகும் என தீபாவளிக்கு முன்பே, ஆர்யா கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து, ஆர்யாவின் 30-தாவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெயர் மற்றும்  பர்ஸ்ட் லுக், டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news