பாரிஸ் ஜெயராஜாக சந்தானம்! ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம்…

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த ‘பிஸ்கோத்து’ படம், தீபாவளிக்கு வெளியானது.

இதனைத் தொடர்ந்து சந்தானம், அடுத்து நடிக்கும் படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு, ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சந்தானத்தை வைத்து ‘ஏ1’ படத்தை இயக்கிய ஜான்சனே, பாரிஸ் ஜெயராஜ் படத்தையும் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இப்படம் 2021 ஜனவரியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news