சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்…வைரலாகும் ‘ரெட்’ டிரைலர்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தடம். குற்றம் – திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அருண் விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக தடம் அமைந்தது. அந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டுள்ளார். அந்த படத்தின் வெற்றியால் நீண்ட நாட்களாக தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்த அருண் விஜய் வரிசையாக படங்களில் கமிட் ஆகிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் என்ற பெயரில் உருவாகியுள்ளது. தெலுங்கு நடிகரான ராம் பொத்தானி நடித்துள்ளார். காவல் துறை அதிகாரி வேடத்தில் நிவேதா பெத்துராஜ் மற்றும் பிகில் புகழ் அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் இப்போது இணையத்தில் வெளியாகி கவனிப்பைப் பெற்றுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news