ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின்அதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து, ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக OTTஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது பொன்மகள் வந்தால்

கொரோனா காரணமாக பல திரைப்படங்கள் வெளியிட தடை  விதிக்கப்பட்டது. அதனால் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைமுக்கு அண்மையில் ஒரு நல்ல விலைக்கு விற்றது. ஆனால், திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களை எப்படி நேரடியாக OTT தளத்தில் விற்கலாம் என தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, இருப்பினும் பல முன்னணி தயாரிப்பாளர்கள் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் OTT-ல் வெளியாவதற்கு ஆதரவு குரல் கொடுத்தனர்.

அதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து, ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இப்படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம், இப்படம் மே 29-ஆம் தேதி வெளியிடப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news