“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 10,228 பேருந்துகள் இயக்கப்படும், சென்னை தவிர பிற ஊர்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பொங்கலுக்கு பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 17,18,19 ஆகிய தேதிகளில் 15,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு சென்னை கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும் பூவிருந்தவல்லியில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news