‘அரசியலுக்கு வர கட்சிகள் அழைப்பு விடுத்தன!’

தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாபுராஜ் இயக்கும், பிளாக் காபி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார், ஓவியா. இவர், ”களவாணி படத்தால், பெரிய அளவில் எனக்கு, ரசிகர்கள் கிடைத்தனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ரசிகர் வட்டம் பெருகியது. ஆனால், ஏனோ எனக்கு, தமிழில் சரியான வாய்ப்புகள் வரவில்லை,” என, வருத்தப்படுகிறார்.

”சமீபத்தில் வெளியான, 90 எம்.எல்., படத்தில், அதீத கவர்ச்சியாக நான் நடித்ததாக, பலரும் விமர்சித்தனர். இனி, கவனத்துடன் இருப்பேன்,” என்றவர், ”என்னை அரசியலுக்கு வரும்படி, நான்கு கட்சிகள் அழைத்தன. ஆனால், நான் மறுத்து விட்டேன்,” என, பெருமையுடன் கூறுகிறார் ஓவியா.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news