பொன்.ராம் இயக்க, சசிகுமார் நடிக்கும், எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. அடுத்ததாக, தேனி அரசு மருத்துவமனையில், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியாக புகார் எழுந்தது. இப்போது, எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் கதை தன்னுடையது என, பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த, 2017ல், வார இதழ் ஒன்றின் ஆண்டு மலரில், ‘இதயக்கனி’ என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். எம்.ஜி.ஆர்., ரசிகர் ஒருவருக்கும், அவரது பேரனுக்கும் […]