ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
கொரோனாவுக்கு பலியான சினிமா நடிகர்! – அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளம் சினிமா நடிகர் ஒருவர் கொரோனாவால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை ஷமன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
முதல் அலையின் போது எஸ்பிபி உயிரிழந்தார். இரண்டாவது அலையில் நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்றால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.